ஓடும் பேருந்திலிருந்து வாலிபர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சடையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அடைக்கலம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் கீழப்பழுவூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திகேயன் என்பவர் ஓடும் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கார்த்திகேயன் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்த சக பயணிகள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.