Categories
சினிமா

“ஓடிடி-யில் வெளியாகிய சாணிக் காயிதம் படம்”…. சில மணி நேரத்தில் படக்குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன் ஆவார். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உட்பட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்.
தற்போது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் “சாணிக் காயிதம்” படத்தில் செல்வராகவன் நடித்து முடித்து இருக்கிறார். இதில் செல்வ ராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த படம் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியது. இந்த நிலையில் சாணிக் காயிதம் திரைப்படம் வெளியாகிய சில மணி நேரத்திலேயே யூடியூப்பில் லீக் ஆகியுள்ளது. இதன் காரணமாக படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Categories

Tech |