தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்தனர். 2011ல் வெளிவந்த பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டன. இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கொரோனா காரணமாக இந்த படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. தற்போது இந்த படம் முடிக்கப்பட்டது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை படத்தின் இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அதன்பின் நயன்தாராவின் அடுத்த வெளியீடான ‘நெற்றிக்கண்’ படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.