இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள கசடதபற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபுவும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கசடதபற. இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, ஜிப்ரான், ஷான் ரோல்டன், சாம்.சி.எஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் கொரோனா பரவல் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் கசடதபற படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.