Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ‘சார்பட்டா பரம்பரை’… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே ஆர்யாவின் டெடி படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |