Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் சந்திரஹாசனின் கடைசி படம்… டிரைலருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட கமல்…!!!

மறைந்த நடிகர் சந்திரஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கடந்த 2017-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

அதில் ‘என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசி படம் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ அக்டோபர் 8-ம் தேதி சோனி லைவ்வில் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8-ம் தேதி’ என பதிவிட்டுள்ளார். மேலும் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |