ஓசூர் அருகே அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்துநிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.