Categories
மாநில செய்திகள்

“ஓசி வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம்”… போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு… உண்மை நிலவரம் என்ன…?

மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக சில பகுதி பெண்கள் சில இலவசமாக பயணம் செய்ய விரும்பாமல் கண்டக்டர் இடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த சம்பவங்களின் வீடியோக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தற்போது இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பை வாய்மொழியாக வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட் பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அது பற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்த போதும் அது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை எனவும் சில பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை விரும்பாமல் நடத்துனரிடம் டிக்கெட் கேட்கும் சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளார். இதற்கு இடையே இது பற்றி கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் அரசியல் லாபத்திற்காக சிலர் பெண்களை தூண்டிவிட்டு இலவச கட்டணம் வேண்டாம் எனக் கூற வைத்த சம்பவத்திற்கு பின்னர் தமிழக அரசு கட்டணம் செலுத்த விரும்பும் பெண்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டிருந்தால் அது சரியான முடிவு என கூறுகின்றார்கள்.

Categories

Tech |