நடிகர் நாகா சைதன்யா தற்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தற்போது பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். அமீர்கானின் திரைப்படமான “லால் சிங் சட்டா” மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது, பின் அவர் விலகியதால் நாகசைதன்யா நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து நாக சைதன்யா கூறியுள்ளதாவது, “என் வாழ்க்கை துவங்கியதிலிருந்து தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று இருந்தேன்.
நான் சிறு பையனாக இருக்கும் பொழுது ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை பார்த்திருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தற்போது அந்த திரைப்படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்தியில் என் கதாபாத்திரங்களை சில மாற்றங்களை செய்து நடிக்க இருக்கிறேன். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கார்கிலில் 45 நாட்கள் நடந்தது. அந்த படப்பிடிப்பு மறக்க முடியாதது. நடிகர் அமீர் கானால்தான் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இத்திரைப்படத்தில் நடித்தது மறக்க முடியாத நினைவுகள்” என அவர் கூறியுள்ளார்.