கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் முருகசாமி மற்றும் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டர் சமீரனிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியரும் அனுமதி கொடுத்ததால் முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.