Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு வீட்டுக்கு ரூ.5000 கொடுங்க….!! தீர்மானம் போட்ட திமுக கூட்டணி …!!

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தோழமை  கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் பேரிடர் காலத்தில் நடக்கும் அரசின் குளறுபடிகள் மற்றும் நிர்வாக திறன் பற்றிய ஆலோசனை நடைபெற்றது. இரண்டரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதில் 9 தீர்மானம் போடப்பட்டது.

  • கொரோனா மரணங்களில் முக்கிய தகவல்களை மறைத்தது, 444 மரணங்களை தாமதமாக வெளியுலகுக்கு கூறியது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் பண உதவி தர வேண்டும் என வலியுறுத்தி இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் தியாகம் செய்த கொரோனா போராளிகளுக்கான நிதியுதவியை வழங்கிட அறிவுறுத்தப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • உள்ளாட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பறிப்பதை விட்டு அனைத்து உள்ளாட்சிக்கும் உரிய நிதியை வழங்க வேண்டும். அவர்களுக்குரிய நிதியை விடுவிக்க வேண்டும் எனக்கூறி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
  • திமுகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சுமத்தி பதிவு செய்து வருகின்றனர். இதில் கவனம் செலுத்தி அதனை சரிசெய்ய வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக திமுக வலியுறுத்தி வரும் கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் சுற்றுச்சூழல் அறிக்கை 2020 திரும்பப்பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இறுதியாக கருத்து சுதந்திரத்தில் கழுத்து நெறிக்கப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய குழு அமைக்க தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.

Categories

Tech |