மாதம் ரூபாய் 5000 வருமானம் கிடைக்கும் அஞ்சல் துறையின் சிறந்த திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
இந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4950 வருமானம் கிடைக்கும். அஞ்சல் கணக்கு தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல் முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இதில் வட்டி தொகை வழங்கப்படும். மாதம் தோறும் கணக்கில் சேரும் வட்டி தொகையை எடுக்காவிட்டாலும், வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி வீதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படுகின்றது.
18 வயது நிரம்பிய எவரும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சமாக 3 பேர் வரை இணைந்து கணக்கை தொடங்கலாம். குழந்தைகள் மற்றும் தெளிவற்ற மனம் கொண்டவர்கள் என்றால் பாதுகாவலர் ஒருவர் துணையுடன் இதில் நாம் கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை நமது கணக்கில் வரவு வைக்கப்படும். இது ஒரு மிகச்சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தால் முதிர்வு காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் மாதம் மாதம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நீங்கள் வாழ முடியும்.