Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு பகுதியிலும் மின் வினியோக பணிகள்…. சமூக வலைதளத்தில் பதிவிட… அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் பளு மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தாலும் சேவைகளை குறித்த காலத்தில் செய்து தருவதில்லை. அதனால் விண்ணப்பதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை விரைவில் மேற்கொள்ளுமாறு அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கம்பங்கள் மாற்றுவது, மின் வினியோக பெட்டியின் உயரத்தை அதிகரிப்பது மற்றும் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை உயரத்திற்கு இழுத்து கட்டுவது போன்ற சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மின்வாரியம் 44 மின் பகிர்மான வட்டம் களுக்கும் தனித்தனியே ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் சீரமைப்பு பணிகள் குறித்து புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் தினமும் எத்தனை மின் இணைப்பு வழங்கப்பட்டது, சேதமடைந்த சாதனங்கள் மாற்றப்பட்டன என முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுமாறு பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |