கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 300 கொரோனா நோயாளிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோன தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்று கடுமையாக பரவிவருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும், 300 கொரோனா நோயாளிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.