பட்டாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஒல்லியாக தேகம் கொண்டிருப்பவர்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் எடை கூடுவார்கள்.
பச்சை பட்டாணி நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலத்தை தரும்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு காய்கறிகளுடன், பட்டாணியை சேர்த்து சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும்.
பட்டாணியில் பீட்டா சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடலில் கொலஸ்ட்ராலை வெகுவாக தடுக்கிறது.
பட்டாணி உட்கொள்வதன் மூலம், அதிக எடை உள்ளவர்களுக்கு மேற்கொண்டு கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கும். எடை கூட விரும்புபவர்களுக்கு இந்த பட்டாணி நன்றாக உதவுகிறது.