Categories
மாநில செய்திகள்

ஒலிம்பியாட் முதல் நாசா வரை அரசு பள்ளி மாணவர்களை தகுதிப்படுத்துவோம்……. புதிய முயற்சியில் இறங்கிய பத்மபிரியா….!!!

கல்வி என்பதும் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. இந்தியாவைப் பொறுத்தவரையில் கல்வி என்பது இன்னும் பாமரர்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. அதிலும் வளர்ச்சி அடையாத மாநிலங்களின் வறுமையின் காரணமாக பலர் கல்வி கற்பது இல்லை. இன்னும் சிலர் பள்ளி இடை நிற்றல் செய்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அந்த அளவிற்கு நிலை மோசம் இல்லை என்றாலும் கூட இன்னும் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் திறன் வளர்ப்பில் புதிய முயற்சியில் இயற்கை ஆர்வலர் பத்மபிரியா இறங்கி உள்ளார். விதை விதைப்போம் என்னும் அறக்கட்டளை மூலம் அரசு பள்ளி மாணவர்களின் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியுமெரசி என்கிலேவ் 2012” என்னும் திட்டத்தின் மூலம் கணிதத்தை வெறும் பாடமாக பார்க்கலாம். அதை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும் திட்டமாக அமைத்துக் கொள்வோம். இதில் மாணவர்கள் பயிற்சி பெரும்போது ஒலிம்பியாட் தேர்வு எழுதும் அளவிற்கு அவர்களால் தகுதி பெற முடியும். இதன் அடுத்த கட்டமாக மாணவர்களால் நாசா வரை தகுதி பெற முடியும். அதற்கான பயிற்சி அரசு பள்ளியில் துவக்கியுள்ளோம். இது கணக்கை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் பயிற்சியாகும். புத்தக தாண்டிய கல்வி என்பது அவசியம் ஆகிறது என்ற நோக்கத்தில் புதிய முயற்சி எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதிய முயற்சி எடுத்து வரும் இயற்கை ஆர்வலர் பத்மபிரியாவின் இந்த அறிவியல் இயக்கத்தை பலரும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற திட்டங்களுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Categories

Tech |