Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற…. லவ்லினாவுக்கு ரெனால்ட் பரிசு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினாவுக்கு ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியான கைகர் காரை பரிசளித்துள்ளது. இது குறித்து பேசிய லவ்லீனா, இது தனது முதல் கார். தனக்கு கார் ஓட்ட தெரியும் என்றும் தெரிவித்தார். பின்னர் அவர் தன்னுடைய பெற்றோர்களை இதில் வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதாக ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |