Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 30 தான் கடைசி தேதி….!!!!

ஒற்றை பெண் குழந்தையை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது மத்திய அரசு. இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை திட்டம் உள்ளது. ஒற்றை பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள செய்தியில்,முழுநேர முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நடப்பு கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு மற்றும் விடுதி கட்டணம் ஆகியவை வழங்கப்படாது. கல்வி உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,100 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்கள் scholarships.gov.inஎன்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |