Categories
தேசிய செய்திகள்

ஒற்றுமை யாத்திரை….. அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி..!!

ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார்.

ராகுல் காந்தியின் கடைசியாக  சனிக்கிழமை 24ஆம் தேதி டெல்லியில் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். இதில் இந்திய குடிமகனாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக 9 நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் ஜனவரி 3ஆம் தேதி ஒற்றுமை யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற உத்தரபிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்..ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் 448 கிலோமீட்டர் தூர யாத்திரை உ.பி, பஞ்சாப் வழியாக காஷ்மீரில் ஜனவரி 26 இல் குடியரசு தினத்தன்று நிறைவடையும்..

Categories

Tech |