அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இதற்கான தீவிர பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி,
தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளரை விரைவில் அதிமுக தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் ஆர் பி உதயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிமுகவில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதிலும் முதல்வர் பழனிசாமியை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்க வேண்டும். வேறு பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.