Categories
தேசிய செய்திகள்

ஒரே ராகத்தில் பாடுறாங்க….. கிரிக்கெட் பிரபலங்களை கலாய்த்த சித்தார்த்…..!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் முக்கிய பிரபலங்களை நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு மத்தியில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றபோது தடியடி நடத்தியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக திரைப்பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் டுவிட்டரில் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் அவர்களை கலாய்க்கும் வகையில் நடிகர் சித்தார்த் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எப்போதும் ஒரு நிலைப்பாட்டை எடுக்காத சக்தி வாய்ந்த நபர்கள், திடீரென ஒரே குரலில் ஒரே ராகத்தில் பாடுவதுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட இடத்தில் பகடைக்காய்கள் போய் நிற்கிறார்கள் எனில், அதன் பெயர்தான் கொள்கைபரப்பு பிரசாரம்” என்று அவர் விமர்சித்துள்ளார். ‘இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிராக’என்ற பொருளில் #Indian AgainstPropaganda என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வரும் சச்சின், விராட் கோலி மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பல பிரபலங்களையே இவர் இப்படி விமர்சித்துள்ளார்.

Categories

Tech |