தம்பதிகள் ஏராளமானோர் மணி விழாவை கடந்து பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 1977 முதல் 78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது 108 பேருக்கு அறுவது வயது முடிந்துள்ளது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் கணவர் மற்றும் மனைவிகளுடன் இணைந்து தம்பதியராக அனைவரும் ஒன்று கூடினர். அப்போது அனைவருக்கும் அங்கு ஒரே மேடையில் அறுபதாம் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.