Categories
தேசிய செய்திகள்

ஒரே மாவட்டத்தை சேர்ந்த 130 குழந்தைகள்…. மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடும்  என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |