அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஸாவோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.