Categories
மாநில செய்திகள்

ஒரே பெயரில் பல மின் இணைப்பு….  ஆய்வுக்கு அதிரடி உத்தரவு…!!!

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தலைமைப் பொறியாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தற்போது எதுவும் இல்லை என்ற அளவுக்கு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் பல நிறுவனங்கள், வீடுகள், விவசாயம், கட்டிடங்கள் என்று அனைத்துக்கும் மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது.  அதேபோன்று தமிழகமும் மின் மிகை மாநிலமாக தற்போது நிலவி வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒரே வளாகத்தில், ஒரே பெயரில் பல தாழ்வழுத்த மின் இணைப்புகள் இணைத்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது.

இதை தொடர்ந்து ஒரே பெயரில் வழங்கப்பட்டுள்ள பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆய்வு செய்ய மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆராய்வதற்கு தலைமை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி பலரும் இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக புகார்கள் வந்த நிலையில். மின்வாரியம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

Categories

Tech |