Categories
மாநில செய்திகள்

ஒரே பெயரின் கீழ் பல இணைப்புகள்…. மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. தமிழக அரசு…!!!!

தமிழகம் முழுவதும் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக மின்சார வாரியத்தில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் மின் இணைப்புகள் இரண்டு விதமாக வழங்கப்படுகிறது. ஒன்று உயர் அழுத்த மின் இணைப்பு, மற்றொன்று தாழ்வழுத்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உயரழுத்த மின் இணைப்பு லிப்ட், மோட்டார் உள்ளிட்டவை பயன்படுத்தபடும் மொத்தம் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்கபடுகிறது.

இந்த நிலையில் ஒரு சிலர் தாழ்வழுத்த மின் இணைப்பில் அனைத்து விதமான உயரழுத்த மின் பொருட்களையும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்து வருகிறது. அதாவது மின் கட்டண விகிதத்தை தவறாக பயன்படுத்துதல் முறைகேடான செயல் ஆகும். எனவே இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது மின்சார சட்டம் 2003 இன் பிரிவு 151B ன் படி கைது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அதனை சரிசெய்யும் விதமாக தமிழக மின் வாரியம் தொடர்ந்ததுஆய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |