Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்ட பலன்கள் கிடைக்கும். இந்திய முன்னாள் இராணுவ வீரர்கள் இயக்கம் மத்திய பாதுகாப்புத் துறை செயலருக்கு மனு அனுப்பியது. பிரதமர் ஒரே தவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் என்று 2014 மே 31ல் அறிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு 2014 ஏப்ரல்.1 முதல் 2015 மார்ச் 31 ல் செயல்படுத்துவதற்குரிய அறிவிப்பை வெளியிட்டது. அதனை முறையாக நடைமுறைபடுத்தவில்லை. ஆகவே நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” சின்னதுரை குறிப்பிட்டார். அதன்பின் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரணை மேற்கொண்டார். மத்திய அரசு தரப்பில், இவ்வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் மார்ச் 16ல் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்தது. மனுதாரர் தரப்பில், மத்திய அரசின் கொள்கைமுடிவு 2014-2015 முதல் நடைமுறைக்கு வந்தது.

இருப்பினும் ஒரே பதவி,ஒரே ஓய்வூதியம் வழங்குவதற்குரிய சுற்றறிக்கையின் படி ஓய்வூதியம் சரியான முறையில் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. அதற்கு நீதிபதி, மத்திய அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் ஏற்கனவே அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் அத்திட்டத்தின்படி பலன்களை மனு தாரர் பெற்றிருக்கும் நிலையில், அரசாணையின்படி முறையாக ஓய்வூதியம் நிர்ணயம் செய்யவில்லை என்று கூறுகிறார். மனு தாரர் மத்திய அரசிடம் புதியதாக மனுஅளிக்கலாம். அதனை தகுதி அடிப்படையில் பரிசீலித்து 4 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |