Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பெண்கள் கூட்டு பலாத்காரம்…. 6 பேர் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

ஜார்க்கண்டை மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு மிரட்டியுள்ளனர்.

அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களை வன்கொடுமை செய்த 6 பேரில் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |