Categories
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 2 புயல்கள்….. 4,133 பாதுகாப்பற்ற இடங்கள்…. தமிழக மக்களுக்கு பெரும் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தீவிரமடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, அரபிக் கடலில் உருவாகியுள்ள GATI புயல் நாளை சோமாலியாவில் கரையை கடக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 4,133 இடங்கள் பாதுக்காப்பற்றவையாக  இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடமாக கருதப்படும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மக்களும் எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Categories

Tech |