ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கனமழை, வெள்ளப்பெருக்கு, பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் ரயில்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி சில மாநிலங்களில் கன மழை மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு பணியில் உள்ள சிக்கல் காரணமாக 203 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 43 ரயில்கள் பகுதி அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் அதிக அளவிலான ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.