Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 2 வீடுகளில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ  உடைக்கப்பட்டு அதிலிருந்த 3,50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வடிவேலன் அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |