Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 17 முறை…. அனுபவத்தை பகிர்ந்த…. ஹாலிவுட் நடிகர்….!!!

ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் என்பவர் சமீபத்தில் வெளியான அன்சார்ட் படத்தின் அனுபவங்களை கூறியுள்ளார்.

டாம் ஹாலண்ட் என்பவர் ஹாலிவுட் ஹீரோ ஆவார். இவர் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானவர். இவர் நடித்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான அன்சார்ட் படம் நேற்று வெளியானது. இப்படம் ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஒரு குழு ஆயிரம் வருடங்களுக்கு முன் ஒரு புதையலை புதைத்து வைத்திருக்கிறது. அந்த புதையலை  ஹீரோ டாம் ஹாலண்ட் மற்றும் வில்லன் கும்பல் தேடி செல்லும் கதை.

இப்படத்தில் டாம் ஹாலண்ட் ஆக்ஷன் காட்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி கூறியதாவது “உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றான ஒரு புதையலை கண்டுபிடிக்க நானும் வில்லனான சுல்லி சல்லிவனும் போவோம். அப்படி போகும்போது பல சண்டை காட்சிகள் இடம்பெறுகின்றன. அப்படி ஒரு பிரம்மாண்டமான காட்சிதான் விமான ஸ்டாண்ட். இந்த காட்சிக்கு முன்பு நான் ஒரு காரில் மோதுவது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் மட்டும் நான் ஒரே நாளில் 17 முறை காரில் மோதிக்கொண்டேன். அப்போது காயம் ஏற்பட்டு கடும் வலியுடன் இந்த காட்சியில் நடித்து முடித்தேன்” என்றார்.

Categories

Tech |