சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை 40 ஆயிரத்தை நெருங்கியது. 176 ரூபாய் உயர்ந்து 39, 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன், ரஷ்யா போர் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி மாதத்திலிருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக 22ஆம் தேதி 38,000 க்கும் கடந்த 24 ஆம் தேதி 39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டியது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து ,ரூ 40, 440க்கும்,கிராமுக்கு ரூ.85 ரூபாய் அதிகரித்து ரூ.5055 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1.80 அதிகரித்து ரூபாய் 75.20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.