Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் கோவை சிட்டியவே மாத்திட்டாரு… அதிரடி காட்டிய போலீஸ் கமிஷனர்…!!!!

கோவை மாநகரில் ஐஜி அந்தஸ்திலானா ஆணையர் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் கீழ் 4 துணை ஆணையர்கள், 12க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், 35க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 2,200 பேர் பணியாற்றி வருகின்றன. அதனை தொடர்ந்து காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதனை போல தேர்தல் சமயங்களிலும் அப்போதைய சூழலை பொறுத்து பணியிடம் மாற்றம் செய்யப்படுவர். இத்தகைய நடைமுறை கோவை காவல்துறையிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் 3 ஆண்டுகளாக கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைதல், ஒரு தரப்பிற்கு அனுசரணையாக செயல்படுதல் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது. அதிலும் மாநகர உளவுத்துறையில் 10 ஆண்டுகளில் கடந்த ஒரே இடத்தில் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.

இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்ததால் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடியில் இறங்கினார் . அதாவது மூன்று ஆண்டுகளை கடந்து ஒரே இடத்தில் பணியாற்றி காவலர்களை பணியிட மாற்றம் செய்ய துணை ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்று காவலர்கள் குறித்த பட்டியல் தயாரிப்பு பணியில் முடக்கி விடப்பட்டது. அதன் முதல் கட்டமாக 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து மாநகர காவல் துறையினர் கூறியது, உளவுத்துறை அல்லாத மற்ற பிரிவுகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், உளவுத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகும் ஒரே இடத்தில் பணியாற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை மொத்தம் 202 காவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 76 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 97 தலைமை காவலர்கள் அடங்குவர். மேலும் மீதமுள்ளவர்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |