பீகாரில் முடி வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு ட்ரீம் லெவல் ஆப்பின் மூலம் ஒரு கோடி பரிசு விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் போட்டியை பார்த்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகமுடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் முடிவெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவர் தனது செல்போனில் ட்ரீம் லெவல் ஆப் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் பெட்டிங் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையேயான போட்டியில் இவர் டீமை உருவாக்கியுள்ளார். போட்டியின் முடிவில் இவர் உருவாக்கிய டீம் முதல் இடத்தை பிடித்தது. இதனால் இவருக்கு ஒரு கோடி பரிசு விழுந்தது. வரிப்பணம் போக மீதம் 70 லட்சம் இவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது: ” பணம் வந்ததை தற்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. பணம் வந்த காரணத்தினால் நான் எனது பார்பர் தொழிலை விட போவதில்லை. இந்த பணத்தை வைத்து எனக்கு உள்ள கடனை அடைத்து, பின்னர் ஒரு வீடு கட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். முடி வெட்டும் தொழிலாளிக்கு ஐபிஎல் பார்ப்பது மூலம் ஒரு கோடி பரிசு விழுந்ததும் வைரலாகி வருகிறது.