Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில்…! இவ்வளவு கோடி காணிக்கையா ? கோடி கோடியாய் கொட்டிய திருப்பதி ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரானா ஊரடங்கு தளர்வு பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் 8 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் உண்டியலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று வைகுண்ட துவாதசியையொட்டி , இன்று காலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் இல்லாமல் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர்.

Categories

Tech |