தேனியில் ஒரே நாளில் 4 நபர்களிடமிருந்து 3 1/4 லட்ச ரூபாயினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேரிடம் ரூபாய் 3 1/4 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதாவது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த காரில் ஈஸ்வரன் என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 1,50,500 பணத்தினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தேனியில் வெங்கடாசல புரத்தில் வாகன சோதனையின் போது காரில் ஜெகதீசன் என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூபாய் 63,100 கொண்டு வந்ததால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் கம்பத்தில் நடந்த சோதனையில் 73,700 ரூபாயும், கடமலைக்குண்டு என்ற பகுதியில் திமுக உறுப்பினரிடமிருந்து 32,500 ரூபாயும் பறிமுதல் செய்தனர். இவ்வாறாக மொத்தமாக ஒரே நாளில் 3,19,300 பறக்கும் படையினர்கள் பறிமுதல் செய்துள்ளார்கள்.