இரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காயங்களுடன் ஒரு சடலம் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் என்பது தெரியவந்தது. இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெபராஜ் ரயில்வே பாலத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று திருவிதாங்கோடு பகுதியில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குழித்துறை ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஓடும் ரயிலில்ர ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவரது வலது கை தண்டவாளத்தில் சிக்கி துண்டானது. இதைப்பார்த்த ரயில்வே காவல்துறையினர் தாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.