இரு நாயகிகளுக்கு காதல் ஏற்பட இயக்குனர் கௌதம் மேனன் காரணமாக இருந்துள்ளார்.
தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை “ஏ மாய சேசாவே” என்று தெலுங்கில் எடுத்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இவர்கள் காதல் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர்.
இதைப் போல விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை இந்தியில் கௌதம் மேனன் எடுத்தார். அப்போது பிரதீக் பாபர் மற்றும் எமிஜாக்சன் நடித்திருந்தார்கள். படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது ஆனால் இவர்கள் காதல் நிலைக்கவில்லை. இந்த இரண்டு ஹீரோயினுக்களுக்கும் காதல் ஏற்பட கௌதம் மேனன் காரணமாக இருந்துள்ளார்.