Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஜாலிதான் போங்க!…. இது பக்கா தமிழ்படம்!…. நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்….!!!!

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ் ஆகும். “ஜாதி ரத்னலு” தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்து இருக்கின்றனர். “பிரின்ஸ்” படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது “வன்முறையோ, வில்லனோ இன்றி மிகவும் ஜாலியாக உருவாகி இருக்கும் படம்தான் பிரின்ஸ். இரண்டரை மணிநேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில்கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இதனை ஒரு புது முயற்சி என்றும் கூறலாம். அதாவது ஒரு வெளிநாட்டு பெண்ணை தமிழ்பையன் காதலிக்கிறது தான் இந்த படம். நகைச்சுவை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அதனை சவாலாக ஏற்று பண்ணியிருக்கோம். இதனிடையில் இது பக்கா தமிழ்படம் தான். அத்துடன் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறோம். இயக்குனர் தெலுங்கு என்பதால் அப்படியான ஒரு தகவல் பரவி உள்ளதாக நினைக்கிறேன். இதற்கிடையில் ஹீரோயின் கதைப்படி வெளிநாட்டு பெண் என்பதால் மரியாவை நடிக்க வைத்துள்ளோம்.

நாங்கள் இருவருமே ஆசிரியர்களாக நடித்து இருக்கிறோம். இன்றைக்கு முக்கியமான தேவை மனிதாபிமானம்தான். அதை இப்படம் வலியுறுத்துகிறது. என் திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு தியேட்டரில் வெளிவருதற்கு முன்னதாகவே லாபத்தை கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறேன். இப்படமும் அப்படித்தான், ஆனால் எவ்வளவு லாபம் என தெரியாது. அடுத்து மாவீரன் திரைப்படம் வெளியாகும். அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்து கமல்சார் தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |