மாமியார் மருமகள் உறவு முறை இந்த காலத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும் சில குடும்பங்களில் மாமியாரும், மருமகளும் தாயும், மகளும் போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மழை காலத்தில் மாமியார் ஒருவர் வீட்டின் வாசலில் தலைவலி தாங்காமல் உட்கார்ந்திருக்கிறார். அவரை பார்த்த மருமகள், அத்தை ஏன் இப்படி கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என மிகுந்த பரிவோடு கேட்கிறார். மருமகளின் அனுசரணையான கேள்வியால் கவலை நீங்கிய மாமியார் ஒரு சாயா கொண்டு வா மருமகளே போதும் என்கிறார்.
உடனே தேனீர் தயாரிப்பதற்காக புறப்படும் மருமகள் சட்டென திரும்பி அத்தை சாயா தயாரிப்பதற்கு எத்தனை விசில் வர வேண்டும் என்று கேட்கிறார். மருமகளின் கேள்வியை கேட்டு அதிர்ச்சியடையும் மாமியார், எனக்கு தலைவலி போய்விட்டது. நானே சாயா செய்து கொள்கிறேன் என்று கூறினார். இந்த வீடியோவில் காண்பது போல தான் பல இளம் பெண்கள் உள்ளனர்.
குறிப்பாக மருமகள்கள், சுதந்திரம் என்கிற பெயரால் பெண்களுக்கு நிறைய உரிமைகளை வழங்கி இருந்தாலும், ஒரு தேனீர் தயாரிப்பது கூட தெரியாமல் பெண்களை வளர்த்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது. குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது ஒரு தாயின் கடமை. அதற்குரிய பொருளாதாரத்தை ஏற்படுத்தி தருவது தந்தையின் கடமை.
உரிமை என்கிற பெயரால் இன்றைய இளம் பெண்கள் தங்களின் இல்லக் கடமைகளை கற்றுக் கொள்ளத் தவறிவிட்டனரோ என்கிற அய்யம் உருவாகியுள்ளது. சமையல் என்பது வெறும் வேலையல்லஅது குடும்பத்தின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் ஒரு காலை. குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். அந்த மலையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுக்கொண்டு தங்கள் சகோதரர்களுக்கும் கற்று தரவேண்டும் அப்பொழுதுதான் சிறப்பான குடும்பங்கள் உருவாகும்.