ஜம்மு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.