பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியத் திரைப்படம் லைகர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிகிய இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகியது. குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் தேவரகொண்ட குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். இவற்றில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். தெருஓரத்தில் டீகடை நடத்தக்கூடிய பெண்ணாகவும், தகராறு செய்தல் என கிட்டத்தட்ட ஒரு ரௌடி போலவே ரம்யாகிருஷ்ணன் இப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற போதும், ரம்யா நடிப்பு பாராட்டை பெற்றது. இந்த நிலையில் பேட்டியளித்த ரம்யாகிருஷ்ணன், சினிமா மீது மக்களுக்கு பல எதிர்பார்ப்பு உள்ளது. மக்களின் புரிந்துணர்வுகளை இளம் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதெல்லாம் ஒரு வில்லன், ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், 2 சண்டை, டூயாட் பாடல்களை மக்கள் விரும்புவது இல்லை.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிய விக்ரம் படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய 3 பேருக்கும் சமமாக நடித்ததாகவும், மூவருக்குமே சமமான ரோல் கொடுத்துள்ளதாவும், இப்படிப்பட்ட வலுவான திரைப்படத்தையும், நன்றாக நடிக்கும் நடிகர்களையும் தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். நீலாம்பரி, சிவகாமி ஆகிய கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்தால் போரடிக்கும். இதன் காரணமாக சவாலா கதாபாத்திரங்கில் நடிப்பதை விரும்புவதாக கூறிய அவர், இந்தி படங்களைவிட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தான் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்தி படங்களிலிருந்து தனக்கு வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.