ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை தொடங்கி சிறிது நாட்களில் எதிர்பார்ப்பது என்பது குழந்தை தான். குழந்தை என்பது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக விளங்குகின்றது. குழந்தையை பெற்று எடுக்கும் தருணம் என்பது மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு தாய்மாரும் அந்த தருணத்திற்காக காத்திருப்பார்கள். பல நாடுகளில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். ஏன் ஒரு சில தாய்மார்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுப்பார்கள் இதுபோன்ற சம்பவங்கள் சற்று அரிதானது.
ஆனால் பிரேசிலில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது ஒரே கருவில் இரட்டைக் குழந்தை உருவாகி உள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால் அந்த இரட்டை குழந்தைக்கும் வெவ்வேறு தந்தைகளாம். பிரேசிலில் 19 வயதான இளம் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு இரு தந்தைகள் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ஒரே நாளில் இரண்டு பேருடன் உடலுறவு கொண்டதை அடுத்து குழந்தைகளின் தந்தை யார் என்பதில் பல சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் எந்த குழந்தை எந்த தந்தைக்கு பிறந்தது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் ஒரு ட்விஸ்ட் காத்துள்ளது. அது என்னவென்றால் இரு குழந்தைகளுக்கும் அந்த இருவருமே தந்தைகள் என்பது தெரிய வந்தது. இதை மெடிக்கல் மிராக்கிள் என்று கூறுகிறார்கள்.