இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருத்தணியிலுள்ள மலைக்கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,”திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர், வெள்ளி தேர்களை செப்பனிடும் பணிகளானது கடந்த 10 வருடமாக நடந்துகொண்டு இருக்கின்றது. கூடிய விரைவில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு முருகன் இதில் பவனி வருவார். மேலும் கோவில்களுக்கு வரும் பெண்கள் ஆண்கள் என இருவர்களுக்கு குளிப்பதற்காக தனித்தனி அறைகள் கட்டித்தரப்படும்.
மேலும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காக புதியத்திட்டம் ஒன்றை அறநிலையத்துறையும் பி.எஸ்.என் எல் நிறுவனமும் சேர்ந்து புதிய திட்டம் ஒன்றை அமைத்துள்ளது. இதன் காரணமாக மின்னணு இயந்திரமானது மொட்டை அடிக்கும் இடத்தில் அமைக்கப்படும். பயனாளிககள் இந்த இயந்திரம் முன் நின்று தங்களது முகத்தை ஸ்கேன் செய்தப்பின் 8939971540 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தர வேண்டும். பின்னர் டோக்கனானது, பயனாளியின் புகைப்படத்துடன் ஸ்கேன் செய்த உடனே அனுப்பப்படும். மொட்டை அடித்துக் கொள்ளும் பக்தர்கள் இதை காட்டி பயனடைந்து கொள்ளலாம்” என்று கூறினார்’