செல்ஃபியால் வைர ஐபோன் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கலகலப்பு படத்தில் வைர போனை கைப்பற்றிய வில்லன் கும்பலும், காவல்துறையினரும், கதாநாயகர்களும் ஒரு காமெடி யுத்தமே நடத்தி இருப்பார்கள். அந்த சமயத்தில் கருணாகரன் வேறு நடிப்பின் உச்சம் செய்திருப்பார். இந்த காமெடியை மிஞ்சும் சம்பவம் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சைபர் கிரைம் குற்றங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள ஒரு ஊரின் பெயரில் சைபர் கிரைம் குறித்து ஒரு படமே எடுத்தார்கள்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் சாஹிப்கஞ்ச் பகுதியில் ஒருவர், வைர ஐபோனை திருடியதுடன் அந்த போனை பயன்படுத்தி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைப் பற்றி அறிந்த காவலர்கள் அவரை கொத்தாக தூக்கி காவல் நிலையம் கொண்டு சென்று கொடுக்க வேண்டியதை கொடுத்து உண்மையை வாங்கினார். தற்போது வைர ஐபோனை திருடியவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட வைரத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது.