பிரபல நடிகர் தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்பின் நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் மற்றும் வாத்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்க, யோகி பாபு மற்றும் எல்லி அவுரம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 7-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பான தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் தனுஷ், ஒரே ஒரு ஊருக்குள்ள, இரண்டு ராஜா இருந்தாராம், ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம் 🏹#Naanevaruven @selvaraghavan @theVcreations pic.twitter.com/fZCDa1OdN4— Dhanush (@dhanushkraja) September 5, 2022