கடலூரில் 106 வயதிலும் ஒருவிரல் புரட்சி செய்து வரும் சிறந்த குடிமகனை மாவட்ட துணை ஆட்சியர் நேரில் சென்று கவுரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
திட்டக்குடி அடுத்த பெருவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருக்கு வயது 106, நான்கு தலைமுறைகளை கண்ட சின்னப்பையன் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான அனைத்து தேர்தல்களிலும் ஒரு முறை கூட தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருந்தது கிடையாது. சிறந்த குடிமகனான சின்ன பையனை தேசிய வாக்காளர் தினத்தில் கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் நேரில் சென்று கௌரவித்தார்.
மூன்று மகள்கள் 6 பேரக் பிள்ளைகள் மற்றும் 15 கொல்லு பேரக் குழந்தைகளுடன் வசித்து வரும் சின்னப்பையன் நாட்டிலுள்ள இளைய சமுதாயத்தினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கி வருகிறார். தள்ளாத வயதிலும் தன்னுடைய தேவைகளுக்காக விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இந்த முதியவருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.