திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் விவசாயியை தாக்கிய சம்பவத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அசோக் குமார் என்பவர் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள அபிஷேக கட்டளை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார். இதனை அடுத்து இவர் வழக்கம் போல அவருடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு பிப் 15 ஆம் தேதி கொண்டு சென்று நேரடி கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளார்.
ஆனால், அந்த நெல் மூட்டையை ஒரு வாரம் ஆனா நிலையிலும் அதை எடுக்கபடாமல் அப்படியே இருந்தது. இது குறித்து அந்த விவசாயி அங்கு பணிபுரியும் அலுவலரிடம் கேட்டார். அவர்கள் அதற்கு சரியான பதில் அளிக்காத நிலையில் அவர் மறுபடியும் வந்து கேட்டுள்ளார் இதனால் அங்கு பணிபுரியும் ஊழியருக்கு அசோக் குமாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அந்த விவசாயி படுகாயமடைந்தார். அவர் இந்த சம்பவத்தை உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.