புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் அணைக்கு செல்கிறது. இதனால் காமராஜர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.